News January 29, 2026

தேனி: இளம்பெண் தற்கொலை

image

தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகா (25). இவருக்கும், இவரது கணவருக்கும் சில வருடங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவர் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த ஸ்ரீகா நேற்று முன் தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

தேனி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

தேனி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <>கிளிக் <<>>செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 31, 2026

தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 31, 2026

தேனி: 124 கிலோ புகையிலை கடத்தல்

image

கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.30) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 124 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட முருகன் (53), பிரபாகரன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.

error: Content is protected !!