News April 8, 2025
தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 08.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News April 17, 2025
போடி அருகே கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News April 17, 2025
தேனி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

திருவண்ணாமலையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களின் காரும், சபரிமலையில் தரிசனம் முடித்து திரும்பிய தருமபுரியைச் சேர்ந்த காரும் குமுளி மலைப்பாதை வழிவிடும் முருகன் கோயில் அருகே நேருக்கு நேர் மோதியது. இதில் 2 காரில் வந்த 8 பேரும் காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த மலைப்பாதையில் போலீசார் நிறுத்தி ஆலோசனை வழங்க மக்கள் வலியுறுத்துகின்றனர்.
News April 16, 2025
வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்