News March 29, 2025
தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 28.03.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 31, 2025
தேனி : ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் சங்கமம்

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து 8 கீ.மீ தொலைவில் உள்ளது சுருளிமலை கோடி லிங்கேஷ்வர் ஆலயம். இந்தக் கோயிலில் ஆயிரக்காணக்கான லிங்கங்கள் உள்ளது. இந்த லிங்கங்கள் அனைத்தும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை ஆகும். இங்கு வழிபட்டால் கடன் பிரச்சனை நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனையில் இருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
News March 31, 2025
தேனி :கிணற்றில் மிதந்த பெண் சடலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் முனியாண்டி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 31, 2025
தேனி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

தேனி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.