News September 11, 2025
தேனி: இரட்டிப்பு லாபம் தரும் தொழிலுக்கு இலவச பயிற்சி

தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.இங்கு இன்று (செப்.11ல்) காலை 10:00 மணி முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடக்க உள்ளது. இதில் விவசாயிகள், பொது மக்கள், தொழில்முனைவோர் பங்கேற்று பயனடையலாம். விரும்புவோர் 98650 – 16174 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இந்த வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
Similar News
News September 11, 2025
செப்.13 ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)

தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் வருகின்ற செப் 13-ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என நீதிபதி சொர்ணம் J.நடராஜன் தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
போடி: கடன் தொல்லையால் ஒருவர் தற்கொலை

போடி, மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் குடும்ப செலவிற்காக அதிக அளவில் கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்த தயாளன் நேற்று (செப்.10) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News September 11, 2025
தேனி: லாரி கவிழ்ந்து தலை சிக்கி டிரைவர் துடிதுடித்து பலி

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் பொன்கிருஷ்ணன். டிப்பர் லாரி ஓட்டுநராக இவர் நேற்று (செப்.10) வைகை அணை அருகே உள்ள தனியார் கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக டிப்பர் லாரியை ஓட்டிச் சென்றார். வனவியல் கல்லுாரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த பொன்கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். வைகை அணை போலீசார் வழக்கு பதிந்தனர்.