News January 3, 2026

தேனி: ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஆண் சடலம் மீட்பு!

image

கூடலூா் லோயா்கேம்ப் பகுதியில் முல்லைப் பெரியாற்றில் டிச.30-ம் தேதி சங்கா், இவரது மனைவி கணேஷ்வரி ஆகிய இருவரும் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடி வந்த நிலையில் புதன்கிழமை அவரது மனைவி மீட்கப்பட்டார். தொடர்ந்து சங்கரின் உடலை தேடும் பணி நடந்தது. இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு நேற்று சங்கரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Similar News

News January 31, 2026

தேனி: மனைவி மீது கணவன் தாக்குதல்

image

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (36). இவரது கணவர் கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி மதுபோதையில் பாண்டிச்செல்வி இடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் தனது மனைவி பாண்டிச்செல்வியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து பாண்டிச்செல்வி அளித்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் கணேசன் மீது நேற்று வழக்குப்பதிவு.

News January 31, 2026

தேனி: சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

image

தேவாரத்தை சோ்ந்தவர் முருகன். இவர் 2025ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், சிறுமியின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

News January 31, 2026

தேனி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!