News May 30, 2024

தேனி: ஆட்டோவில் தவறி விழுந்த பெண் மரணம்

image

இராயப்பன்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெட்ரோல் பங்க் அருகே உள்ள தனது தோட்டத்தின் அருகில் இறங்க முயன்ற போது ஆட்டோ டிரைவர் கவனிக்காமல் ஆட்டோவை எடுத்ததால் மல்லிகா கீழே விழுந்தார். தலையில் அடிபட்ட நிலையில், தேனி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராயன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

Similar News

News February 14, 2026

கணவர் கொடுமையால் பெண் விபரீத முடிவு

image

பெரியகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் நிரஞ்சனாதேவியை (30) மதுரையை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவபாலன், மனைவியின் நகைகளை விற்று செலவு செய்ததுடன் குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த நிரஞ்சனாதேவி தந்தை வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

News February 14, 2026

தேனி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..

image

தேனி மக்களே..நீங்கள் பயன்படுத்திய மொத்த மின்சாரத்தின் பயன்பாடு, அரசின் மானியம் குறித்து தெரிஞ்சிக்கனுமா? இனி கவலை வேண்டாம். மின் சேவைகளை எளிமைப்படுத்த மின்வாரியம் TNEB என்ற APP-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து ஒருமுறை லாக்இன் செய்யவும். அதில் மின் கட்டணம், மின்சாரம் துண்டிப்பு, மின் திருட்டு, மின்மோட்டார் பழுது போன்றவை குறித்து புகார் தெரிவிக்கலாம். SHARE IT

News February 14, 2026

தேனி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY NOW

image

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!