News March 20, 2024
தேனி ஆட்சியர் புதிய புகார் எண் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய செய்திகளை பிரச்சாரங்களாக மேற்கொண்டால் அல்லது அவர்களது அலைபேசிக்கு ஆட்சேபனையான குறுங்செய்தி/பதிவு செய்யப்பட்ட அழைப்புகள் வந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் 93638 73078 (வாட்ஸ்ஆப்) 04546-261730 (தொலைபேசி) ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
Similar News
News April 9, 2025
தேனியில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர், இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு , பொறியியல் படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 9, 2025
தேனி உழவர் சந்தையில் காய்கறி விலை விபரம்

தேனி உழவர் சந்தையில் (ஏப்ரல் 09) கத்தரி ரூ.24/20, தக்காளி ரூ.18-15, வெண்டை ரூ.34/30, கொத்தவரை ரூ.20, சுரை ரூ.08-06, புடலை ரூ.28, பாகல் ரூ.35, பீர்க்கை ரூ.35/25, பூசணி ரூ.14-08, மிளகாய் ரூ.30-25, அவரை ரூ.60/50, உருளை ரூ.30, கருணை ரூ.78, சேனை ரூ.55, உள்ளி ரூ.40-35, பல்லாரி ரூ.28, பீட்ரூட் ரூ.20, நூல்கோல் ரூ.22/20, பீன்ஸ் ரூ.65, கோஸ் ரூ.15, கேரட் ரூ.26/20, சவ்சவ் ரூ.24 க்கு விற்கப்படுகிறது.
News April 9, 2025
வேளாண் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

தேனி ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கடந்த 2015.ம் ஆண்டு தேனி மாவட்ட வேளாண்மைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தேனி தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (ஏப்.8) ராதாகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித் துறை நடுவா் சரவணக்குமாா் தீா்ப்பளித்தாா்.