News January 3, 2026
தேனி அருகே வெள்ளபெருக்கு… போலீசார் எச்சரிக்கை.!

கேரளா, போடி. குரங்கணி, கொட்டகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணை தடுப்பணையை கடந்து வெள்ளப் பெருக்காக நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்து எச்சரித்துள்ளனர்.
Similar News
News January 3, 2026
தேனி: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை ரெடி!

தேனி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
தேனி: மன உளைச்சலில் இளைஞர் விபரீத முடிவு

நாராயணதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவா (29). இவருக்கு சற்று வாய் பேச முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சல் அடைந்த சிவா நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் (ஜன.1) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News January 3, 2026
தேனி: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளியில் இன்று (03.01.2026) காலை 09 மணி முதல் மாலை 04 வரை நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவர்களின் ஆலோசனையை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


