News May 2, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி

image

அம்சாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார்.இவர் நேற்று வேல்நகரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு தனது உறவினர் முத்து என்பவருடன் டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தார். சில்வார்பட்டி பிரிவு அருகே வேகமாக சென்ற டூவீலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்து மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து  போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News November 5, 2025

தேனி, வீரபாண்டி மக்களுக்கு GOOD NEWS

image

தேனி, வீரபாண்டி, தேவாரம் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் மின்சாதம் இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக்கவும், மின் விநியோகம் இருக்கும் எனவும் மின் வாரிய செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

image

தேனி மாவட்டம், மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News November 4, 2025

சின்னமனூரில் மின்தடை ரத்து

image

நாளை (05.11.2025) பராமரிப்பு பணி காரணமாக 110 KV மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையங்களில் உள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால், மேற்கண்ட பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் இருக்கும் என மின்செயற்பொறியாளர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!