News April 16, 2024

தேனி அருகே விபத்து: ஒருவர் பலி 

image

கம்பம் பகுதியை சோ்ந்தவா் பிரபாகரன் ( 52). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரபாகரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஏப்.15) அவர் உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Similar News

News September 18, 2025

தேனி: நெருங்கும் பருவமழை இது ரொம்ப முக்கியம்..!

image

தேனி மக்களே! மழை காலம் தொடங்க இருப்பதால், மின்சார சேவை அடிக்கடி பாதிக்கப்படும். அப்போது பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News September 18, 2025

தேனி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

தேனி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் செய்து<<>> தேனி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 18, 2025

தேனியில் மாணவர்களுக்கு ரூ.1.95 கோடி கல்விகடன்

image

கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவார் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று (செப்.17) தேனி மாவட்ட நிா்வாகம், முன்னோடி வங்கி ஆகியவை சாா்பில் மாணவர்கள் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்விக் கடன் கோரி ஏற்கெனவே விண்ணப்பித்திருந்த உயா் கல்வி பயிலும் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடி வங்கிக் கடனுக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

error: Content is protected !!