News April 8, 2024
தேனி அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

ஆண்டிபட்டியை சேர்ந்த அருண் நேற்று இரவு தீனதயாளன் என்பவருடன் ஜம்புலிபுத்தூருக்கு டூவிலரில் சென்று கொண்டிருந்தார். கள்ளர் விடுதி அருகே சென்ற போது எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 15, 2026
தேனி : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

தேனி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
News February 15, 2026
தேனி: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சிறை

தேனியைச் சோ்ந்தவா் இளங்கோவன் (50). இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2024-ம் ஆண்டு தேனி மகளிா் காவல் நிலைய போலீசார் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நேற்று இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் தீர்ப்பளித்தார்.
News February 15, 2026
தேனி: கார் மோதி பரிதாப பலி

தேனி மாவட்டம், கோகிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் பிப்.13 அன்று அவரது பைக்கில் குச்சனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக பாலாஜி என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சங்கர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


