News November 7, 2025

தேனி அருகே லாரி மோதியதில் ஒருவர் பலி

image

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (36). இவர் நேற்று (நவ.6) அவரது பைக்கில் உப்புக்கோட்டை பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் செல்வேந்திரன் என்பவர் ஓட்டிவந்த லாரி ஈஸ்வரன் பைக் மீது மோதியது. இதில் ஈஸ்வரன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 7, 2025

தேனி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

தேனி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

News November 7, 2025

தேனி: தாய், தந்தை என 4 பேர் மீது பாய்ந்த போக்சோ

image

போடியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். தற்போது சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். சிறுமி என தெரிந்தும் திருமணத்திற்கு உடந்தையாக பிரகாஷின் தாயார் அமுதா, சிறுமியின் தாய், தந்தை இருந்துள்ளனர். இதுகுறித்து போடி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ், அமுதா உள்பட 4 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 7, 2025

BREAKING தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை

image

தமிழக உள் பகு​தி​களின் ​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று முதல் நவ.11 வரை ஒருசில இடங்​களில் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். இந்நிலையில் இன்று தேனி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்காக மஞ்சள் அலட்ர்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இது ஏற்ப தங்களது திட்டங்களை வகுத்து கொள்வது நல்லது.

error: Content is protected !!