News November 23, 2025

தேனி அருகே துப்பாக்கியுடன் மோதல்

image

பாலாா்பட்டி பகுதியை சோ்ந்தவா் மணவாளன். இவருக்கும் இவரது வீட்டை அடுத்துள்ள சத்தியாவுக்கும் இடப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் அந்த இடத்தை நில அளவை செய்வதற்காக நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் நேற்று முன்தினம் சென்றனா். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சத்யாவின் உறவினரான ரவி என்பவர் கை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இருதரப்பு புகாரில் 8 பேர் கைது.

Similar News

News February 16, 2026

தேனி: அரசு தேர்வர்கள் கவனத்திற்கு..!

image

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து, மிக எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க; பயனுள்ளவரை சென்றடையட்டும்

News February 16, 2026

தேனி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.

News February 16, 2026

தேனி: 35 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

image

குமுளி, லோயர் கேம்பில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யதிலகராணி தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை சோதனையிட்டதில் 35 கிலோ கஞ்சா கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வி (47), முனியசாமி (36), பாலசுப்பிரமணி (38) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!