News January 16, 2025
தேனி அருகே கொலை: 6 பேர் கைது

தேனி அருகே கோகிலாபுரத்தை சேர்ந்த மோகன்பால் (21) தனது நண்பர் பிரகாஷுடன் ஜன.11 அன்று நடந்து சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்,அஜீத் இவரது நண்பர்கள் கெளதம்,பிரவீன்,ரஞ்சித்,லட்சுமணன் ஆகியோா் சோ்ந்து மோகன்பாலுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தமபாளையம் போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News November 12, 2025
தேனி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தேனி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
தேனி: மனைவியை துன்புறுத்திய கணவர் மீது வழக்கு

போடி அருகே சிலமலை பகுதியை சேர்ந்தவர் அருள்கனி (22). இவரது கணவர் காளிமுத்து (28). இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காளிமுத்து தினமும் மது அருந்திவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அருள்கனி அளித்த புகாரில் போடி அனைத்து மகளிர் போலீசார் காளிமுத்து மீது நேற்று (நவ.11) வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 12, 2025
போடி: வீடு புகுந்து நகைகளை திருடிய சிறுவர்கள்

போடி அருகேயுள்ள துரைராஜபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவரது வீட்டுக்குள் புகுந்த பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த 15, 13 வயது உடைய 2 சிறுவர்கள் பீரோவை திறந்து ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர். இதுகுறித்து சுரேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


