News April 26, 2024

தேனி அருகே அரிவாள் வெட்டு

image

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மாமனாருக்கும் உறவினர் பாண்டியனுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. கணேசன் மாமனாருக்கு ஆதரவாக பேசி அவரைக் காப்பாற்ற முயன்றார். அதனால் கோபமடைந்த பாண்டியன் கையில் இருந்த அரிவாளால் கணேசனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 2, 2026

தேனி: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

தேனி: மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

image

அரண்மனை புதூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் ஜன.27 அன்று மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே திடீரென மயங்கி விழுந்த நிலையில் மதுரை GH-க்கு கொண்டு செல்லப்பட்டார். உள்நோயாளியாக இருந்த அவருக்கு நேற்று முன் தினம் மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் 4 பேர் மறுவாழ்வு பெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News February 1, 2026

தேனி : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar<<>> மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!