News October 9, 2025
தேனி: அரசு அலுவலக அலைச்சல் இல்லை; இனி டிஜிட்டல் மயம்.!

தேனி மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASY யாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!
Similar News
News November 16, 2025
தேனி: சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவர் படுகாயம்

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரபிக் (48). இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் சின்னமனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 14 வயது சிறுவன் ரபீக் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்தில் ரபீக் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.
News November 16, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று (15.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News November 15, 2025
66.90 அடியாக குறைந்த வைகை அணையின் நீர்மட்டம்

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து முதல் போக மற்றும் ஒருபோக பாசனம், மதுரை மாவட்ட தேவை மற்றும் குடிநீருக்காக என அணையில் இருந்து வினாடிக்கு 2299 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர் வரத்து 1402 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (நவ.15) 66.90 அடியாக குறைந்து காணப்படுகிறது.


