News April 5, 2025
தேனி : அனைத்து கனிமங்களுக்கும் இ-பெர்மிட் கட்டாயம்

தேனி மாவட்ட புவியியல், சுரங்கத்துறை சார்பில் 2024 முதல் www.mimastn.gov.in என்ற இணையத்தளம் மூலம் குவாரியில் இருந்து எடுத்து செல்லும் கனிமங்களுக்கு மொத்த அனுமதிக்கான சீட்டு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும் போது புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் இருந்து உரியநடைச்சீட்டு பெற்று கொண்டுசெல்ல வேண்டும் என்பது கட்டாயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 5, 2025
இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 5, 2025
நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட விதை

தேனி அரசு மருத்துவமனைக்கு கடந்த வாரம் வட வீரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜக்கம்மாள் (50) மூச்சுத் திணறல் மற்றும் இருமல் காரணமாக புற நோயாளியாக நுரையீரல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கட்டி போன்று இருப்பதை ஆப்பரேஷன் செய்ததில் ஆச்சரியப்படும் விதமாக அது சப்போட்டா பழத்தின் விதை என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 வருடங்களாக இருந்த விதை மருத்துவர்களால் அகற்றப்பட்டது.
News April 5, 2025
தேனியில் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலை

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட மின் தொழில்நுட்பாளர் (Electrical Technician) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பெறியியல் (EEE) படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு கிளிக் செய்து 01-05-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்