News September 22, 2025
தேனியில் 100 லிட்டர் மதுபானம் பறிமுதல்

தேவிகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் விஷ்ணு தலைமையிலான போலீசார் பாலசுப்பிரமணியன், சிஜூடேனியல் கொண்ட குழு நேற்று முன்தினம் இரவு சைலன்ட்வாலி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 100 லிட்டர் மதுபானங்கள் கொண்டு சென்றது தெரியவந்தது.அவர்களிடமிருந்து , ஆட்டோ, 2 அலைபேசிகள், ரூ.1200 ஆகியவை கைப்பற்றப்பட்டன.
Similar News
News September 22, 2025
தேனி: கழிவறையில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன் (77). இவருக்கும் இவரது மகனுக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சண்டை வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட கண்ணப்பன் சாப்பிடாமலும் உடல் நல குறைபாட்டுக்கான மாத்திரைகள் உண்ணாமலும் இருந்துள்ளார். இதனால் நேற்று (செப்.21) வீட்டு கழிவறையில் மயக்கம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். கம்பம் போலீசார் விசாரணை.
News September 22, 2025
தேனி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

தேனி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News September 22, 2025
தேனியில் தந்தையை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

தேனியை சேர்ந்தவர் செல்வம். சொத்து தகராறு காரணமாக இவரது மகன் முத்துராஜா, அவரது மனைவி ஹேமலதா இணைந்து சில நாட்களுக்கு முன் செல்வத்தை தாக்கினர். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் ரூ.22,500, ரூ.40,000 மதிப்பிலான பொருட்களை முத்துராஜா, ஹேமலதா எடுத்துச் சென்றனர். இது குறித்த புகாரில் தம்பதியர் மீது தேனி போலீசார் நேற்று (செப்.21) வழக்கு பதிவு.