News March 31, 2025
தேனியில் வைகை அணை அருகே புதிய அணை

தேனி எம்.பி தங்கதமிழ்ச் செல்வன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, வைகை அணையைத் தூர்வார ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி செலவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செலவில் தூர் வாருவதற்குப் பதில் அருகில் புதிய அணை கட்டலாம் எனவும் கூறுகின்றனர். கூடுதல் நீர்தேக்கும் வகையில் நீர் தேக்கப்பகுதிக்கு அருகில் புதிய அணை கட்ட தயாராகி வருகிறது என்றார்.
Similar News
News April 1, 2025
தேனியில் மழைக்கு வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது . வளிமண்டல கீழ் அடுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தேனி உட்பட ஐந்து மாவட்டங்களில் இன்று(ஏப்ரல்.1) இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல ஏப்ரல் மூன்றாம் தேதி தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 1, 2025
தேனி : பெண்களுக்கு அறிய வாய்ப்பு

தேனி மாவட்டம் PCபட்டியில் தனியார் நிறுவனம் சார்பில் மகளிருக்கான இலவச தையல் , ஆரிஎம்ராய்ட்ரி, அழகுக்கலை உள்ளிட்ட திறன் பயிற்சிகள் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் நடைபெற்ற உள்ளது. இந்த பயிற்சியில் 18-35 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் கலந்து கொள்ளலாம். இது பற்றி கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள 8838252367 , 9994670967 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News April 1, 2025
தேனியில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.3,4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.