News September 20, 2025

தேனியில் வெளியான அதிர்ச்சி தகவல்

image

கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம், பெரியகுளம் பகுதிகளில் கடந்த மாதம் இரு பெண்கள் உட்பட சில்லரை கஞ்சா வியாபாரிகள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளி, கல்லுாரி பகுதி அருகே கைது செய்துள்ளனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘கஞ்சா பொட்டலங்கள் ரூ. 75 முதல் ரூ.100க்கு விற்பனை செய்வதாகவும், மாணவர்கள் தான் பேரம் பேசாமல் வாங்கக்கூடிய வாடிக்கையாளர்கள்,’ என அதிர்ச்சியான தகவலை தெரிவித்தனர்.

Similar News

News November 15, 2025

போடி வணிகவரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

image

போடி வணிக வரித்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய செல்லையா (59) என்பவர் 2013.ல் வியாபாரி ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது செல்லையா மதுரை மண்டல வணிகவரித்துறை அலுவலக உதவி ஆய்வாளராக உள்ளார். இந்த வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செல்லையாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News November 15, 2025

தேனியில் நாளை ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு

image

தேனி மாவட்டத்தில் நாளை (நவ.16) தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 220 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வு எழுதுவோர் காலை 8 மணிக்கு முன் தோ்வு மையத்துக்கு செல்ல வேண்டும். 8 மணிக்கு மேல் தோ்வு மைய நுழைவு வாயில்கள் மூடப்பட்டும். தோ்வு குறித்த விவரங்களை 9487771077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். SHARE IT

News November 15, 2025

தேனி: ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் கைது

image

சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (40) தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு தேனியில் பயிற்சிக்கு சென்ற போது போடி பகுதியில் உள்ள நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய ஒருவரிடம் அறிமுகமானார். இந்த நட்பை பயன்படுத்தி மாரிச்செல்வம் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆசிரியை அளித்த புகாரில் சின்னமனூர் போலீசார் மாரிச்செல்வத்தை கைது (நவ.14) செய்தனர்.

error: Content is protected !!