News April 24, 2025

தேனியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட இயந்திர அபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து மே மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவவும்.

Similar News

News January 28, 2026

பெரியகுளம் அருகே கார்கள் மோதி விபத்து

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் நேற்று முன் தினம் பெரியகுளத்திலிருந்து குடும்பத்துடன் காரில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். காட்ரோடு முனிஸ்வரன் கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதி நிலைதடுமாறிய விஜயகுமார் கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் காயமடைந்த விஜயகுமார் உள்பட 6 பேர் சிகிச்சைக்காக GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 28, 2026

தேனி: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

பெரியகுளம்: தீ விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (21) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். 2 தினங்களுக்கு முன்பு வெளியில் சென்ற பிரியதர்ஷினியை அவரது தாயார் வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாக தனக்கு தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!