News April 2, 2024
தேனியில் மிதமான மழை

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டிபட்டி, தேனி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News November 3, 2025
தேனி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.11.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் பொதுமக்களிடமிருந்து அளிக்கப்பட்டன.
News November 3, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <


