News September 12, 2025
தேனியில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2 ,2A, போட்டித் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பித்த தேனி மாவட்டத்தின் சார்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வளாகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு வருகின்ற 13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
Similar News
News September 12, 2025
தேனி: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி

தேனி மக்களே வரும் 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய<
News September 12, 2025
தேனி அருகே இலவச ஹோம் நர்சிங் பயிற்சி

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வரும் செப்.,15-ம் தேதி முதல் இலவச ஹோம் நர்சிங் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் செப்.,15-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு இந்த 8870376796 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News September 12, 2025
ஆண்டிபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை

ஆண்டிபட்டி உயர்மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரமின், ராஜகோபாலன்பட்டி, பொமின்மிநாயக்கன்பட்டி, ஏத்தகோவில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை என தேனி TNEB SE அறிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் தங்களது பணிகளை இதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளலாம்.