News August 19, 2024
தேனியில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம், சீலையம்பட்டி கம்பர் பள்ளித் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் திருமாறன் (19) ஆசைவார்த்தை கூறி, வெளியூர் அழைத்து சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சின்னமனூர் அருகேயுள்ள கூளையனூரில் தங்கியிருந்த சிறுமியை மீட்டனர்.
Similar News
News November 9, 2025
தேனியில் பரவும் குண்டு காய்ச்சல்

தேனி மாவட்டத்தில் தற்போது குளிர் காலம் தொடங்குவதால், சில பசுக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கால்நடை துறையினர் கூறுகையில், இந்த வகை காய்ச்சல் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர். இது 3 நாட்களில் சரியாகி விடும் அச்சம் தேவையில்லை என தெரிவித்தனர்.
News November 9, 2025
தேனி: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

தேனி மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
News November 9, 2025
தேனி: இந்த தேதிகளில் கனமழை

தேனி மக்களே, மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தேனியில் வருகிற 12, 13ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.


