News January 15, 2026

தேனியில் பெண் போலீஸ் மீது தாக்குதல்..

image

தேனி ஆயுதப்படை போலீஸ் திவ்யதர்ஷினி. இவர் மீது இவரது கணவர் அய்யனார் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வதால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து விசாரணைக்காக திவ்யதர்ஷினி தயாராகிய போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அய்யனார் அவரை கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த திவ்யதர்ஷினி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிந்து அய்யனரை கைது செய்தனர்.

Similar News

News January 26, 2026

தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

image

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 26, 2026

தேனி : ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க

error: Content is protected !!