News December 17, 2025
தேனியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல்!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் சிவஜோதி. இவரது கணவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவரது குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சிவஜோதி வீட்டிற்கு சென்ற ராகேஷ் அவரது உறவினர் வெற்றி ஆகியோர் சிவஜோதியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது (டிச.16) செய்தனர்
Similar News
News December 20, 2025
உதவி தொகை தொடர்பான போலி SMS நம்பி ஏமாறாதீர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு 2025 அரசின் உதவி தொகை விண்ணப்பம் என்ற பெயரில் வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 20, 2025
தேனி: பைக்குகள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து (78). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் நேற்று முன் தினம் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். தேனி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது முத்து என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அல்லிநகரம் போலீசார் வழக்கு (டிச.19) பதிவு.
News December 20, 2025
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<


