News December 25, 2025

தேனியில் புகையிலை விற்ற பெண் கைது

image

கோம்பை காவல் நிலைய போலீசார் குற்றச் தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.24) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தேன்மொழி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News

News December 25, 2025

தேனி: ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 3 பேர் படுகாயம்

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (63). நேற்று முன் தினம் இவர் இவரது மகள் மற்றும் பேத்தி ஆகியோர் அழகுராஜா என்பவரது ஆட்டோவில் தேனி நோக்கி சென்றுள்ளனர். லட்சுமிபுரம் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News December 25, 2025

தேனியில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க.

News December 25, 2025

கௌமாரியம்மன் கோயிலில் ரூ.8.71 லட்சம் உண்டியல் காணிக்கை

image

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் வளாகத்தில் 12 நிரந்த உண்டியல்கள், ஒரு திருப்பணி உண்டியல், கண்ணீஸ்வர முடையார் கோயிலில் இரு உண்டியல்கள் என மொத்தம் 15 உண்டியல்கள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. உண்டியலில் காணிக்கையாக ரூ.8.71 லட்சம், தங்கம் 26 கிராம், வெள்ளி 15 கிராம் இருந்தன. கடந்த செப்டம்பரில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!