News December 13, 2024

தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தேனி மாவட்டத்தில் கடந்த நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 7, 2026

தேனி: டாஸ்மாக் கடை ஷட்டரை உடைத்து திருட்டு

image

உத்தமபாளையம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக குமரேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று(மார்ச்.5) கடையை திறக்க சென்ற பொழுது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.12820 மதிப்பிலான 46 மது பாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. திருட்டு சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 6, 2026

தேனி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

image

தேனி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

தேனி:விபத்தில் ஒருவர் பலி; 11 பேர் காயம்

image

ராஜதானி பகுதியை சேர்ந்த வீரணன் என்பவர் அவரது ஆட்டோவில் கூலி வேலைக்கு சென்ற பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவிற்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஆட்டோவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்லாண்டிச்சி (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயம் அடைத்த நிலையில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!