News December 17, 2024
தேனியில் நாளை மின்தடை

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.18) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேனி அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிப்பட்டி, முத்துத்தேவன்பட்டி, பூதிப்புரம், அரண்மனைபுதூர் பெரியகுளம், ஆண்டிபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி,சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
தேனியில் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் ஆக.22 அன்று காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
தேனி இளைஞர்களே.. நீதிமன்ற வேலை..! உடனே APPLY

தேனி இளைஞர்களே.., தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் உயர்நீதிமன்ற <
News August 20, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்:

தேனி மாவட்ட அணைகளின் (ஆக.20) நீர்மட்டம்: வைகை அணை: 69.59 (71) அடி, வரத்து: 802 க.அடி, திறப்பு: 969 க.அடி, பெரியாறு அணை: 135.20 (142) அடி, வரத்து: 2001 க.அடி, திறப்பு: 1000 க.அடி, மஞ்சளார் அணை: 38.80 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 46.14 (126.28) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 49.90 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.