News February 19, 2026

தேனியில் தம்பதிக்கு கத்திக்குத்து

image

கோடாங்கிபட்டியைச் சோ்ந்தவா் ராஜீவ் (36). இவரது மனைவி ரஞ்சிதா (35), இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரஞ்சிதா தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற ராஜீவ், மனைவியுடன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரஞ்சிதாவின் சகோதரரான ராஜேஷ், ராஜீவை கத்தியால் குத்தினாா். போடி தாலுகா போலீசார் ராஜீவ், ராஜேஷ் மீது தனித்தனி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 20, 2026

தேனி : 1975 – 2026 ஒரே நில E.C வேணுமா – லிங்க்!

image

தேனி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக் செ<<>>ய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும்.
எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News February 20, 2026

தேனி மாவட்ட 53 எஸ்.ஐ.க்கள் பணியிட மாற்றம்

image

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 53 எஸ்.ஐ.,க்களை திண்டுக்கல் மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் 58 எஸ்.ஐ,க்களை தேனி மாவட்டத்திற்கும் என மொத்தம் 111 பேரை பணியிட மாறுதல் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2026

தேனி: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

image

தேனி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தி உதவுங்க.

error: Content is protected !!