News December 5, 2024
தேனியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கருத்தரங்கம் பயிலரங்கம்

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (05. 12. 2024) தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கம் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்து ஆலோசித்தார்.
Similar News
News January 24, 2026
PM கிசான் திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு அழைப்பு

வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் PM Kisan நிதி பெறும் 27,320 பயனாளிகளில் இதுவரை 22,503 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத 4817 பயனாளிகள் PM Kisan நிதியினை தொடர்ந்து பெற வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு.
News January 24, 2026
போடியில் இளைஞர் தற்கொலை

போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் பாண்டி கண்ணன் (28). மகனுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பம் இல்லை என பாண்டி கண்ணன் கூறி வந்துள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனம் உடைந்த பாண்டி கண்ணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
News January 24, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 23.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.


