News August 20, 2025

தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் ஆக.22 அன்று காலை காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9894889794 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 1, 2026

தேனி: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News February 1, 2026

தேனி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

image

கடமலைக்குண்டு போலீசார் நேற்று (ஜன.31) வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த மணிகண்டன் (20) என்பவரை சோதனை செய்தனர். அப்பொழுது அவர் மூன்று கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

News February 1, 2026

தேனி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!