News December 17, 2025
தேனியில் கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.16) கம்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது கம்பம் பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த விஷ்வா (27) என்பவரை சோதனை செய்த பொழுது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விஷ்வா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
தேனி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 20, 2025
உதவி தொகை தொடர்பான போலி SMS நம்பி ஏமாறாதீர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு 2025 அரசின் உதவி தொகை விண்ணப்பம் என்ற பெயரில் வரும் போலி குறுஞ்செய்தி லிங்குகள், தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News December 20, 2025
தேனி: பைக்குகள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் முத்து (78). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் நேற்று முன் தினம் ராணுவ வீரர்களுக்கான கேண்டீனில் பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். தேனி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது முத்து என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அல்லிநகரம் போலீசார் வழக்கு (டிச.19) பதிவு.


