News March 22, 2024
தேனியில் ஐந்து பேர் கைது

அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியம்மாள் சக போலீசாருடன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது ஜெயம் நகர் பின்புறம் கருப்பசாமி கோயில் அருகே கூட்டமாக சிலர் அமர்ந்திருந்தனர். போலீசார் அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.அவர்களை சுற்றி வளைத்த போலீசார் சின்னசாமி, ராஜா, ராஜேஷ், கணேசன், அறிவழகன் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
Similar News
News November 2, 2025
தேனி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <
News November 2, 2025
தேனி: தலைமறைவான குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2017-ல் சிறுமியின் உறவினரான சிவராஜ் (41) என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். அவரை கடந்த ஏப்ரலில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று (நவ. 1) சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News November 2, 2025
தேனியில் நாய் கடியால் 10,000 பேர் பாதிப்பு

தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் ஆண்டுக்கு 1,750 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் பெரியகுளம், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆண்டுக்கு 10,000 பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கால்நடைத்துறை 2022-ன் கணக்கின்படி மாவட்டத்தில் 25,000 தெரு நாய்களும், 15,000 வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தகவல்.


