News March 16, 2025
தேனியில் ஐந்து இடங்களில் தரைப்பாலம் அமைகிறது!

தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் ராஜவாய்க்கால் பகுதியில் ரூ.2.26 கோடி மதிப்பில் துார்வாரும் பணியை நகராட்சி துவங்கி உள்ளது. இந்த வாய்க்காலில் 5 இடங்களில் தரைப்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 95 மீ., நீளம், 9 மீ., அகலம், 3 மீ., ஆழத்திற்கு துார்வாரும் பணிகள் நடக்க உள்ளது. மொத்தம் ஐந்து இடத்தில் தரைப்பாலமும் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
Similar News
News November 13, 2025
தேனி: 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த பிளஸ்.2 பள்ளி மாணவி மகேஸ்வரி (17). இவர் நேற்று முன்தினம் பள்ளியில் வகுப்பு முடித்து தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள தனது அறைக்கு சென்ற மாணவி யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
தேனி: டிகிரி முடித்தால் பரோடா வங்கியில் வேலை

தேனி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் தமிழகத்தில் காலியாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1க்குள் இங்கு <
News November 13, 2025
தேனியில் பயங்கரம் ஜீப் மீது பஸ் மோதி 14 பேர் படுகாயம்

கம்பம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த 16 பெண் தொழிலாளர்கள் நேற்று (நவ.12) குமுளி அருகே 8.ம் மைலில் உள்ள ஏலத்தோட்டத்திற்கு ஜீப்பில் சென்றனர். 8.ம் மைல் அருகே சென்ற போது ஜீப் மீது எதிரே வந்த தனியார் பஸ் மோதியது. இதில் மலர்கொடி, ராதா, சிட்டம்மாள், பிரியா, ரெஜினாதேவி, சவுந்தர்யா, ரோகினி, பாலம்மாள், மலர்கொடி, சுவேதா, வளர்மதி, அமுதா உட்பட 14 பெண் தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.


