News April 26, 2025
தேனியில் ஏப்ரல் மாதம் இயல்பை விட அதிகளவு மழை

தேனி மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ.க்கு ஏப்ரல் மாதம் வரை 179.24 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 32.86 மி.மீ குறைவாகும். ஏப்ரல் மாத இயல்பு மழையளவான 99 மி.மீ-க்கு தற்போது வரை 108.8 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஏப்ரல் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 9.8 மி.மீ அதிகமாகும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News April 27, 2025
தேனி மாவட்டத்தில் விதை பயிர்கள் இருப்பு விபரம்

வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை 44.90 மெ.டன், சிறுதானியங்கள் 5.90 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் (தட்டை பயிறு, பாசிபயிறு மற்றும் உளுந்து) 18.15 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் (நிலக்கடைலை) 1.10 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
News April 26, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 26, 2025
சுந்தரவடிவேல் சுவாமிகளின் ஆருடம் நடக்குமா?

2026 தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும், திமுக அமைச்சர்களின் நாக்கில் சனி இருப்பதால் பலர் ஜெயிலுக்குப் போவார்கள். 2027க்கு பின் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் காலம் வரும் என்று தேனி மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார், 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் இவர் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.