News January 16, 2026
தேனியில் இளைஞர் கைது..!

தேனி அருகே தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சக்தி முருகன் (20) என்ற இளைஞர் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நிலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். இதையடுத்து போலீசார் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் சக்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News January 30, 2026
பெரியகுளம்: ஆட்டோ விபத்தில் இளைஞர் பரிதாப பலி

பெரியகுளம், அழகர்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (22). ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று வேலைகளை முடித்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக சாலை செண்டர் மீடியனில் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அருண்குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு.
News January 30, 2026
தேனி: பாலத்தின் மீது கார் மோதி விபத்து

ஆலப்புழாவை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனது குடும்பத்துடன் காரில் தேனி சாலையில் சென்றுள்ளார். அப்போது சீலையம்பட்டி பகுதியில் வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரியாஸ், அவரது மனைவி சபீனா, மகன் அஜ்மல்ரியாஷ் ஆகிய 3 பேரும் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நேற்று சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.
News January 30, 2026
தேனி: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

தேனி மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <


