News April 29, 2025

தேனியில் இளைஞர் அடித்துக் கொலை

image

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலி நகைகளை விற்பனை செய்து மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர் என தவறாக நினைத்து தேனியை சேர்ந்த முகேஷ்பாண்டி, ஆகாஷ், முத்துப்பாண்டி, இளையராஜா, முருகன், சதீஷ்குமார், செளமியன் ஆகியோர் தாக்கி உள்ளனர். இதில் திலீப் உயிரிழந்த நிலையில் இது குறித்த புகாரில் தேனி காவல் துறையினர் 7 பேரையும் நேற்று (ஏப்.28) கைது செய்தனர்.

Similar News

News November 14, 2025

வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்

image

வாக்காளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உதவி மைய முகாம்களானது தேனி மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது பகுதிகளிலே ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 13, 2025

கூடுதல் வாகனங்களை துவக்கி வைத்த தேனி எஸ்.பி

image

தேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனடியாக அணுகி தீர்வு காணவும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக விரைந்து சென்று தீர்வு காணும் வண்ணம் 8 கூடுதல் நான்கு சக்கர ”Quick Reaction Team” வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ ப்ரியா துவக்கி வைத்தார்.

News November 13, 2025

தேனியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!