News January 7, 2026
தேனியில் இலவச பியூட்டீசியன் பயிற்சி… APPLY..!

தேனி, கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் மத்திய அரசு சான்றிதழுடன் ஜன.19 -பிப்.25 வரை இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜன.19ஆம் தேதிக்கு முன் பயிற்சி மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தங்குமிடம், உணவு இலவசம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News January 23, 2026
தேனி: வாகனம் மோதி ஒருவர் பரிதாப பலி

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். அக்குபஞ்சர் மருத்துவரான இவர் நேற்று முன் தினம் மாலை வத்தலக்குண்டு – பெரியகுளம் சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு.
News January 23, 2026
தேனி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

தேனி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News January 23, 2026
ஆண்டிபட்டியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (40). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தெய்வேந்திரன் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.


