News March 21, 2025

தேனிக்கு கனமழை வாய்ப்பு

image

தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில்
இன்றும், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளையும் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 22, 2025

தேனியில் யாருக்கும் தெரியாத சுற்றுலாத்தளம்

image

தேனி மாவட்டத்தில் பலருக்கும் தெரியாத ஒரு சில சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில் ஒரு இடம் தான் லோயர் கேம்ப் அருகே உள்ள வைரவனாறு பகுதி. இங்கு செல்லும் முல்லைப் பெரியாறு தண்ணீர் அதிக கனத்துடன் வெளியேறும் . தண்ணீர் குறுகிய பாலத்தில் மோதி வெளியேறும் போது பார்ப்பதற்கு அழகாக தோன்றும். இயற்கை சூழலுடன் முக்கோண வடிவ தடுப்பணியில் தண்ணீர் செல்வது பலரையும் கவரும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News March 22, 2025

தேனியில் தொடர்ந்து வெளுக்க போகும் மழை

image

தேனி மாவட்டதில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக
தேனி உட்பட 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளான குமுளி, கம்பம் மெட்டு,போடி மெட்டு உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும்.

News March 22, 2025

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்!

image

உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மார்.29 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!