News December 27, 2025
தேனிக்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தல்!

பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (டிச.26) அதிகாலை குற்ற தடுப்பு சம்பந்தமாக போடி விலக்கு அருகே ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த முருகன் (45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News December 28, 2025
தேனியில் 1.25 கோடி மோசடி.!

பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது சித்திக். இவர் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவராக உள்ளார். இவரது நண்பரான ஆசிக்ராஜா என்பவர் செல்போன் கடை நடத்துவதுடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 2022 ஏப்ரலில் முகமதுசித்திக்கிடம் ஆசிக்ராஜா ரூ.1.25 கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றினார். இதுகுறித்த புகாரில் தென்கரை போலீசார் ஆசிக்ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.

தேனி: ரேஷன் கடைக்கு போறீங்களா? செக் பண்ணுங்க

தேனி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க