News September 14, 2025
தேனி:ஏறி இறங்கிய பஸ் சக்கரம் துடிதுடித்த டிரைவர்

கருவேல்நாயக்கன்பட்டி லாரி டிரைவர் சின்னன் 37. இவரது மனைவி கனகவள்ளியை தேனி புது பஸ் ஸ்டாண்டில் மதுரை செல்லும் தனியார் பஸ்சில் ஏற்றிவிட்டு அதே பஸ்சில் அமர்ந்து மனைவியிடம் பேசி கொண்டிருந்தார். பஸ் புறப்படும் போது சின்னன், பஸ் டிரைவர் தீபக்கிடம் கூறிவிட்டு இறங்கினார். அப்போது சின்னன் தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் கைவிரல்கள், இடுப்பு பகுதியில் சின்னன் காயமடைந்தார்.
Similar News
News September 14, 2025
தேனி மக்களே கந்துவட்டி தொல்லையா..!

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க.
News September 14, 2025
தேனி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

தேனி மக்களே உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தேனி மாவட்ட மக்கள் 94431-11912 எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News September 14, 2025
தேனி: குழந்தையின்மை பிரச்சனைக்கு ஒர் தீர்வு

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் காமராஜரின் 123.வது பிறந்தநாளை முன்னிட்டு 123 குழந்தையில்லா தம்பதியினருக்கு இலவச குழந்தையின்மை சிகிச்சை முகாம் இன்று நடைபெறுகிறது. முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. தம்பதிகள் நேரில் பங்கேற்று பயனடையலாம் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லோருக்கும் SHARE பண்ணுங்க கண்டிப்பாக ஒருவருக்காவது உதவும்.