News March 16, 2025
தேனாம்பேட்டை அருகே வெட்டிக்கொலை 1/2

வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜா நேற்று முன்தினம் (மார்.14) தேனாம்பேட்டை அருகே நின்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் ராஜாவைச் சுற்றி வளைத்து வெட்டினர். கழுத்து, தலை பகுதிகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாவை போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
Similar News
News March 17, 2025
குடிநீர் கட்டணம் செலுத்த புதிய முறை அறிவிப்பு

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் தற்போது குடிநீர் கட்டணம் செலுத்தும் புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளது. https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login வலைதளத்தில் டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட், நெட் பேங்கிங் மற்றும் UPI மூலமாக பணம் செலுத்தலாம். இந்த அரையாண்டிற்கான உங்கள் வரி மற்றும் கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 31-03-2025 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News March 17, 2025
சென்னையில் இன்று பெட்ரோல், மற்றும் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சர்வதேச நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இன்று (மார்ச்.17) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39 வருகிறது.
News March 17, 2025
மின்சார பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் கைக்குழந்தை உயிரிழப்பு

மதுரவாயலில் மின்சார பைக்கிற்கு சார்ஜ் போட்ட போது தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.விடிய விடிய பைக்கிற்கு சார்ஜ் போடும் போது தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.