News March 6, 2025
தேசிய நெடுஞ்சாலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து!

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வேலூர் நோக்கி சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் பயணித்த இருவர், லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளனர்.
Similar News
News November 8, 2025
திருப்பத்தூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
திருப்பத்தூர்: ரயிலில் அடிபட்டு கொடூர பலி!

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏரிப்பட்டறை சேர்ந்தவர் கணேசன்(வயது 65) கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.7) இரவு ஜோலார்பேட்டை அடுத்த வளத்துார் மேலாளத்துார் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 8, 2025
திருப்பத்தூரில் காவலாளியை அடித்துக் கொலை!

திருப்பத்தூரில் உள்ள கோல்டன் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வரும் பாச்சல் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்கின்ற அலிஜான் (65) என்பவரை மற்றொரு காவலாளி கார்த்திக் என்பவர் இன்று (நவ.8) காலை அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


