News December 10, 2024

தேசிய தொழிற் சான்றிதழ் பெற்றவர்களுக்கு பொதுத்தேர்வு

image

தேனி மாவட்டத்தில் தேசிய தொழிற் சான்றிதழ்(NTC)/தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ்(NAC) பெற்ற பயிற்சியாளர்கள் பத்தாம் வகுப்பு/மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 17.12.2024 அன்று வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்க சேவை மையங்களில் பதியலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

தேனி: விஷ பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்

image

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் இருந்த பொழுது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று (நவ.10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 11, 2025

தேனி: மாடுகளுடன் தகாத உறவு.. ஒருவர் கைது

image

வருஷநாடு, சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். நேற்று முன்தினம் இவரது மாட்டு கொட்டத்தில் இருந்த கேமராக்கள் திருடு போனது. கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியை சேர்ந்த ஜெகன்பாண்டி (22) மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து மாடுகளை துன்புறுத்தியதும் அதனை தொடர்ந்து கேமராவை திருடியதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. புகாரில் வருஷநாடு போலீசார் ஜெகன்பாண்டியை கைது (நவ. 10) செய்தனர்

News November 11, 2025

தேனி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

image

தேனி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!