News December 4, 2024
தேசிய சுகாதார துறையின் சான்றிதழ் பெற்ற அரசு மருத்துவக் கல்லூரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நல சேவை வழங்குவதில் தமிழ்நாடு அளவில் 93.62% மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து தேசிய சுகாதார அமைப்பின் சான்றிதழை பெற்று சாதனை படைத்துள்ளது .தமிழகத்தில் குழந்தைகள் நல சேவை வழங்குவதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றதற்கு, மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு பாராட்டினார்.
Similar News
News November 17, 2025
கிருஷ்ணகிரி: ஆசிரியர் தகுதி தேர்வு 1,327 பேர் ஆப்சென்ட்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்,
ஆசிரியர் தகுதி தேர்வு 2 நாட்கள் நடந்தன. நேற்று, (நவ.16) 2ம் தாளிற்கான தேர்வு நடந்தது. இதற்கு மாவட்டத்தில் மொத்தம்,10,657 பேர் விண்ணப்பித்திருந்தனர். கிருஷ்ணகிரி, பர்கூர், எலத்தகிரி, சூளகிரி, குந்தாரப்பள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய இடங்களில் மொத்தம்,34 மையங்களில் நடந்த தேர்வில் 9,330 பேர் தேர்வு எழுதிய நிலையில் 1,327 பேர் பங்கேற்கவில்லை.
News November 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (நவ.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணியின் காவலர் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், (நவ.16) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


