News August 15, 2025

தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ஆட்சியரும் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாகப் பணி புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Similar News

News August 15, 2025

அரியலூர்: 31 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கல்

image

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், 31 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். குற்றவாளிகளைக் கண்டறிதல் குழந்தை கடத்தல் போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 15, 2025

அரியலூர்: 28 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 15, 2025

அரியலூர் மாவட்டத்தின் தனிச்சிறப்பு தெரியுமா?

image

சுண்ணாம்புக் கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். இப்படியாக, கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக அரியலூர் உள்ளது.

error: Content is protected !!