News June 15, 2024
தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் தேசிய அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றது. இதையடுத்து ஜல் ஜீவன் சர்வேக்ஷான் 2023 பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தாதேவியிடம் சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் வழங்கினார்.
Similar News
News March 10, 2026
சேலம்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

சேலம் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
சேலம்: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
சேலம்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


