News January 9, 2025
தேசிய அளவிலான போட்டிக்கு செல்வோர்க்கு வாழ்த்து

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தேர்வாகி உள்ள மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அவர்கள் வெற்றி பெற வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார்.
Similar News
News January 26, 2026
தி.மலை: கூலி தொழிலாளி கொடூர பலி!

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 26, 2026
ஆரணி: மாட்டு சண்டையை தடுக்க சென்றவர் பலி!

ஆரணி அருகே நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (62) இவர் ஆரணி அமிர்தராஜ் என்பவரின் மாட்டுப் பண்ணையில் மாடுகளை மேய்க்கும் போது, மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டு மோதிக்கொண்டது. மாடுகளை கட்டுப்படுத்த சென்ற கன்னியப்பனை மாடுகள் முட்டி மோதியதில், கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஆரணி கிராமிய காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News January 26, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (25.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


