News October 27, 2025

தேசிய அளவிலான நீச்சல் போட்டி, பெரம்பலூர் மாணவி தேர்வு

image

சென்னை வேளச்சேரியில் நேற்று (அக்.25) 6வது ஜூனியர் & 11வது சீனியர் மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகள் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவி (CwD Dwarfism) ஜீவா, 3 தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் இவர் வரும் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நேஷனல் அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

Similar News

News January 30, 2026

பெரம்பலுர்: மின்தடை அறிவிப்பு

image

குன்னம், வெண்மணி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர் பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில், காலை 9.30 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் இ.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசால் ஏப்.15-ந்தேதி திருநங்கை திளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்புவோர் <>இங்கே <<>>கிளிக் செய்து பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் தகவலுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (ஜன.30) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!